சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்போது, சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
பலத்த காற்று
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.
கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலனறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் இரத்தினபுரி, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.
இந்த நிலையில், வானிலை மாற்றங்களால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை குறைத்து கொள்ள முன்னெச்சரிக்கையாக செயற்பாடுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |