உயிர் பலி எடுக்கும் கனமழை - 56 பேர் பலி - 21 பேர் மாயம்
கடந்த 72 மணி நேரத்தில் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 46 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது.
நவம்பர் 16 முதல் இன்றுவரை பதிவான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளதாகவும், 21 பேர் காணாமல் போயுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 39 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 79 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 1,158 குடும்பங்களைச் சேர்ந்த 4,008 பேர் மோசமான வானிலை காரணமாக பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
மடுல்சீமை பட்டாவத்த தோட்டத்தைச் சேர்ந்த வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்தமையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களுள் மூன்று வயது சிறுவன் மற்றும் தாய், சகோதரிகள் அடங்குவதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கண்டி கங்கொடவில் ஏற்பட்ட மண்சரிவில் மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. குறைந்தது 17 காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துமவ நிலயைம் தெரிவித்துள்ளது.
அசாதாரணமான வானிலை
நாட்டில் நிலவும் அசாதாரணமான வானிலை காரணமாக இதுவரை 39 அனர்த்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
17 மாவட்டங்களில் உள்ள 79 பிரதேச செயலாளர் பிரிவுகள் இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
அப்பகுதிகளில் 1,158 குடும்பங்களைச் சேர்ந்த 4,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்த அனர்த்தங்கள் காரணமாக 10 பேர் காயமடைந்துள்ளதுடன், 41 குடும்பங்களைச் சேர்ந்த 131 பேர் 5 பாதுகாப்பு மையங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 136 குடும்பங்களைச் சேர்ந்த 472 பேர் தற்போது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 1 நாள் முன்