யாழ் - திருகோணமலை அனர்த்த நிலவரம்...!
யாழ்ப்பாணம்
யாழில் சீரற்ற காலநிலை காரணமாக 231 குடும்பங்களைச் சேர்ந்த 746 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்போது ஒரு வீடு முழுமையாகவும் 17 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
அத்தோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது ஒரு இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டு 9 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - Thampithurai Piratheepan
திருகோணமலை
திருகோணமலையில் சீரற்ற காலநிலையால் 2673 குடும்பங்களைச்சேர்ந்த 7368 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விடயத்தை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார தெரிவித்துள்ளார்.

அதில் 433 குடும்பங்களைச்சேர்ந்த 1545 நபர்கள் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்திருப்பதுடன் குறிப்பாக தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் 14 குடும்பங்களைச்சேர்ந்த 40 நபர்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, குளங்களது நீர்மட்டம் படிப்படியாக உயர்வதால் வான்கதவுகளை திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
செய்திகள் - Nickey thomson
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |