சீரற்ற வானிலை : யாழ்ப்பாணத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவு!
கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதன்படி, அங்கு 253 மில்லி மீற்றராக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் முல்லைத்தீவு, துணுக்காய் பகுதியில் 253 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், அச்சுவேலி பகுதியில் 245.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம்
இதேவேளை, தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை திருகோணமலைக்கு கிழக்கே சுமார் 130 கிலோ மீற்றர் தொலைவில் இன்று அதிகாலை 05.30 மணியளவில் நிலை கொண்டிருந்தது.
அது அடுத்த 12 மணி நேரத்தில் இலங்கையின் கிழக்கு கடற்கரையை அண்மித்து நகர்ந்து சூறாவளியாக வலுப்பெற வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மூன்றாம் நிலை மண்சரிவு முன்னெச்சரிக்கை (சிவப்பு எச்சரிக்கை) விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |