யாழ். புங்கன்குளம் வீதிக்கு குறுக்கே விழுந்த மரம்
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் - புங்கன்குளம் A9 பிரதான சாலைக்கு குறுக்கே மரம் முறிந்துள்ளதால் குறித்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அரியாலை பகுதியே சேர்ந்த இளைஞர்கள் உடனடியாக களத்தில் இறங்கி மரத்தை வெட்டி அகற்றியதுடன் A9 வீதியின் போக்குவரத்து சீர்செய்யப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
யாழ். திருநெல்வேலி சந்தியிலிருந்து கோண்டாவில் செல்லும் பாதையில் வீதியோரத்தில் நின்ற மலை வேம்பு மரம் ஒன்று வேரேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக நேற்றைய தினம் (26.11.2024) வேரோடு சரிந்துள்ளது
மக்கள் அசௌகரிகம்
இதனால் குறித்த பாதையூடாக பயணத்தை செய்யும் மக்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
பின்னர் ஊர் மக்கள் ஒன்றிணைந்து அந்த மரத்தினை வெட்டி அகற்றிய பின்னர் போக்குவரத்து சீராகியது.
இதேவேளை, தொடர் கனமழையால் நல்லூர் பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.
அத்துடன் பறவைக்குளம், மணல்தரை, கந்தர்மடம், அரசடி பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து கொண்டதால் மக்கள் இடப்பெயர்ந்துள்ளனர்
பாடசாலைகளை மூடுமாறு கோரிக்கை
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் (Jaffna) கல்வி வலயத்தில் உள்ள இரண்டு பாடசாலைகளை தற்காலிகமாக மூடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் அமைந்துள்ள யாழ். ஒஸ்மானியா கல்லூரி மற்றும் யாழ். கதீஜா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி இன்றும் (27.11.2024) நாளை (28.11.2024) தற்காலிகமாக மூடுமாறு அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் யாழ். வலயக் கல்விப் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தி - கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



