2 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை
காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (2) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
பலத்த காற்று மற்றும் மின்னல்
மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை சூரியன் தெற்கு நோக்கிய இயக்கத்தின் காரணமாக இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலே இருக்கும்.
இன்று (02) மதியம் 12.10 மணியளவில் சூரியன் மேலே உச்சம் தரும் இலங்கைக்கு மிக அருகில் உள்ள இடங்கள் ஆண்டிகம, பலல்ல, மிகஸ்வெவ, பம்பரகஸ்வெவ, பகமுன, அரலகங்வில, செங்கலடி, ஏறாவூர் ஆகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
