கிளிநொச்சியில் சீரற்ற காலநிலையால் 1000ற்கு மேற்பட்டோர் பாதிப்பு
கிளிநொச்சியில் (Kilinochi chi) சீரற்ற காலநிலையால் காரணமாக தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகின்றது.
பெய்து வருகின்ற கனமழை காரணமாக வீதிகள் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ள நிலையில் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் சுமார் 1272 குடும்பங்களும் 4287 அங்கத்தவர்கள் 5 இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
சீரற்ற வானிலை
சீரற்ற வானிலை காரணமாக சுமார் 11 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 29 கிராமங்களில் 681 குடும்பங்களும் 2423 நபர்கள் 5 பகுதி அளவிலான வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 8 கிராமங்களில் 184 குடும்பங்களும் 489 நபர்கள் 4 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
கன மழை
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுகளில் 11 கிராமங்களில் 103 குடும்பங்களும் 333 நபர்கள் 2 வீடும் பாதிக்கப்பட்டுள்ளது.
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 14 கிராமங்களில் 304 குடும்பங்களும் 1042 அங்கத்தவர்கள் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகின்ற மையால் மாவட்டத்தில் உள்ள சிறு குளங்கள் கனகாம்பிகைகுளம், வன்னேரி குளம், பிறமந்தனாரு குளம் ஆகியன வான் பாய ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |