ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவினால் விபத்து - மூவர் பலி
ஜெர்மனியில் (Germany) கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்ற நிலையில் அடுத்தடுத்து கார்கள், பைக்குகள், லொறிகள் என பல்வேறு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நேற்று (23.01.2026) விபத்து பெடர்போர்ன் நகரில் பெலிபீல்ட் அருகே மார்ஷ்பெல் - லிட்ச்னா வீதி சந்திப்பில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடும் பனிப்பொழி
தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

கடும் பனிப்பொழிவு, வெளிச்சமின்மை , பனிப்பொழிவால் வீதியில் வாகனங்கள் பிரேக் செயல்படாமல் வழுக்கி செல்லுதல் காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்படைந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |