கனேடிய மக்களுக்கு வெளியான அறிவிப்பு
வாரத்தின் தொடக்கத்தில் வெப்பமான காலநிலையை எதிர்கொண்ட டொரொன்டோவில்(Toronto) நாளை முதல் மீண்டும் பனிப்பொழிவும் உறைபனித் தரையும் எதிர்கொள்ளக்கூடும் என கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, அதிகபட்ச வெப்பநிலை 3 பாகை செல்சியசாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இரவு 0 பாகை செல்சியசாக வெப்பநிலை குறையும் என்பதுடன் மாலை நேரத்தில் 2 – 4 சென்றி மீற்றர் வரை பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு
இது, இந்த மாதம் ஆரம்பத்தில் தொடர்ந்து ஏற்பட்ட பனிப் புயல்களில் 50 சென்றிமீற்றருக்கும் அதிகமான பனி வீழ்ந்ததன் பின்னர், நகரம் காணும் முதல் பனிப்பொழிவு என கூறப்படுகிறது.
இதேவேளை, நாளை மற்றும் நாளை மறுதினம் மேகமூட்டம் நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில், நாளை 40% மழை அல்லது பனித்துளிகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும், நாளை மறுதினம் 60% பனிப்பொழிவு அல்லது மழை பெய்யும் சாத்தியம் உண்டு எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 மணி நேரம் முன்
