கொழும்பில் கடும் வாகன நெரிசல் - வாகன சாரதிகளுக்கு அவசர வேண்டுகோள்
By Thulsi
கொழும்பில் சில பகுதி வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பொரளை, டி.எஸ். சேனநாயக்க மாவத்தை மற்றும் மொடல் பாம் வீதி சந்திக்கு அருகில் உள்ள பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கழிவுநீர்க் கட்டமைப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளமையே இந்நிலைமைக்குக் காரணம் எனப் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மாற்று வழி
இதனால் பணி நிமித்தம் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக இந்த பகுதிகளில் நுழைய முயலும் வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் நீண்ட நேர தாமதங்களை எதிர்கொண்டு பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே, குறித்த பாதையை பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்கள் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி