புகையிரத்துடன் கனரக வாகனம் மோதி விபத்து
Srilanka
train
Colombo
collision
Heavy vehicle
By MKkamshan
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த உதய தேவி புகையிரத்துடன் கனரக வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
இன்று பிற்பகல் வெலிகந்த, கடவத்மடுவ புகையிரத கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் கனரக வாகனத்தின் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில், கனரக வாகனம் பலத்த சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்தில் புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக மட்டக்களப்பு புகையிரத பாதையின் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





