யாழில் கன மழையினால் பல குடும்பங்கள் பாதிப்பு
யாழ்ப்பாணத்தில்(Jaffna) பெய்த கன மழை காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அதன்படி, 15 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில், சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/157 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/278 கிராம சேவகர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கன மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்
அத்தோடு, பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/410 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேரும், ஜே/417 கிராம சேவகர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேரும், ஜே/393 கிராம சேவகர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேரும் மற்றும் ஜே/413 கிராம சேவகர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 7பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 தொடக்கம் 45 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுருத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - கஜி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |