இவர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போனமை தொடர்பாக தேடப்படும் இரண்டு நபர்களைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
கிராண்ட்பாஸில் உள்ள சேதவத்தை பகுதியைச் சேர்ந்த தனது மகன் ஒக்டோபர் 11 முதல் காணாமல் போனதாகக் கூறி ஒரு பெண் புகார் அளித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
எந்த தகவலும் கிடைக்கவில்லை
காணாமல் போன நபர் கடைசியாக இரண்டு நபர்களுடன் ஒரு விருந்தில் காணப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் காணாமல் போயுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விருந்தில் பங்கேற்ற இரண்டு நபர்களும் விருந்து நடந்த நாளிலிருந்து அவர்கள் வசிக்கும் பகுதிகளில் இல்லை என்றும், அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நபர்களையும் கைது செய்ய வேண்டும்
எனவே, காணாமல் போன நபரைக் கண்டுபிடிக்க இரண்டு நபர்களையும் கைது செய்ய வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

தேடப்படும் இருவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 071-8591575 மற்றும் 011-2421414 என்ற தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையினரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |