பாலஸ்தீன மக்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் மனிதாபிமான உதவி
பாலஸ்தீன மக்களின் நிலையை கருதி மனிதாபிமான உதவியாக 50 மில்லியன் திர்ஹாம் தொகையை தருவதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இந்திய மதிப்பிலான சுமார் 113 கோடி ரூபாய் பெறுமதியான உதவிகள் மனிதாபிமான அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் கொள்கை
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர காலகட்டங்களில் உதவிகளை வழங்குவது ஐக்கிய அரபு அமீரகத்தின் கொள்கையாகும்.
இதற்கமையவே இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.
இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலானது 8 நாட்களாக தொடர்ந்த நிலையில் தற்போது வரை இருதரப்பிலும் 2,400 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
மனிதாபிமான நெருக்கடி
ஒரு வேளை உணவு மட்டுமே பெற்று கொள்ளும் காஸா மக்களுக்கு எகிப்தில் இருந்து பொருள் உதவிகள் வந்த நிலையில் அதனையும் இஸ்ரேல் தடுத்துள்ளது.
இதனால் மோசமான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச உதவி குழுக்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒவ்வொரு நாடும் இஸ்ரேலில் இருந்து தமது நாட்டு மக்களை மீட்கும் பணிகளில் இறங்கியுள்ளன.
அதில் முதற்கட்டமாக இந்தியா அஜய் திட்டத்தின் ஊடாக 447 இந்தியர்களை மீட்டுள்ளது.
ஏனைய நாடுகளும் மீட்கும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
