ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலகல்
இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இலங்கையின் முதலாவது பெண் தலைமை நிர்வாக அதிகாரியுமான கஸ்தூரி செல்லராஜா தனது பதவியினை உத்தியோகபூர்வமாக ராஜினாமா செய்யவுள்ளதை அறிவித்துள்ளார்.
அதன் படி ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் இல் கஸ்தூரி செல்லராஜாவின் பணி அடுத்த ஆண்டு (2024) மார்ச் மாதம் 30 ஆம் திகதியுடன் உத்தியோகபூர்வமாக நிறைவேறவுள்ளது.
இலங்கைக்கு தொடர்ந்தும் பங்களித்தல், மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை ஆராயும் கஸ்தூரியின் விருப்பத்துதிக்கமையவே அவரின் ராஜினாமா முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வளர்ச்சி மற்றும் வெற்றி
அதன்படி, பல்வேறு வணிக நலன்களைக் கொண்ட புகழ்பெற்ற உலகளாவிய நிறுவனத்தில் ஒரு மதிப்புமிக்க பதவியை ஏற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கஸ்தூரி ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் வாரியத்தில் நிர்வாகமற்ற இயக்குநராக தொடர்ந்து பணியாற்றுவார் என்றும் நிறுவனத்தின் நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.
செல்வி கஸ்தூரி செல்லராஜா, கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக (CEO) பணியாற்றி வருகிறார்.
ஹேமாஸின் வளர்ச்சி மற்றும் வெற்றியில் கஸ்தூரியின் பங்களிப்பு அளப்பெரியது.
கஸ்தூரி செல்லராஜாவின் பங்களிப்புகள், கடந்த மூன்று ஆண்டுகளில் நுகர்வோர், சுகாதாரம் மற்றும் நடமாடும் துறைகளில் அதன் சந்தை நிலைகளை வலுப்படுத்திய நோக்கத்துடன் கூடிய நிறுவனமாக ஹேமாஸை மாற்றுவதற்கு பாரிய பங்களிப்பினை வழங்கியுள்ளது.
இந்நிலையில் அவரின் பதவி விலகல் நிர்வாகத்திற்கு சவாலானதாக இருந்தாலும் அடுத்த கட்டத்தை நோக்கி செயற்படவேண்டிய கட்டாயம் எமக்குள்ளது என கஸ்தூரியின் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவிக்கையில் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஹுசைன் எசுபல்லி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்
