ஹேர்மோஸ் திறப்பு குறித்து அமெரிக்காவில் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் அராக்சி
அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, , இன்று நியூயார்க்கில் கத்தார் மத்தியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் மத்தியஸ்தராக செயல்பட்டு வரும் கட்டார் தரப்பினருடன் நடைபெறும் இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தர்கள் மூலம் பரிமாறப்பட்ட தகவல்கள் மற்றும் குறிப்பாக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரான் முன்வைத்துள்ள நிபந்தனைகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்திற்காக நியூயார்க்கில் உள்ள ஈரானிய தூதுக்குழு, அமெரிக்க அதிகாரிகளுடன் மேலதிக நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்தத் திட்டமிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா. பொதுச் சபை கூட்டம்
அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இரு நாடுகளுக்கும் இடையில் விரைவில் மேலும் பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் எனத் தெரிவித்திருந்தார்.

கடந்த வாரம் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தின் போது, கத்தார் மத்தியஸ்தத்தில் ஈரான் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
இதன்போது, மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கும் ஈரான் ஏழு நிபந்தனைகளை முன்வைத்ததாக தெஹ்ரான் தெரிவித்திருந்தது.
இதனிடையே, ஈரானிய தூதுக்குழுவினர் செவ்வாய்க்கிழமை தெஹ்ரானுக்குத் திரும்ப உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |