பல கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மாவீரர் நினைவேந்தலை அனுஸ்டித்தார் கலையரசன் (படங்கள்)
Ampara
Knight's Day
T. Kalaiarasan
By MKkamshan
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறப்பினர் தவராசா கலையரசன் (Thavarasa Kalaiyarasan) உணர்வு பூர்வமாக மாவீரர்களுக்கு சுடரேற்றி நினைவேந்தலை அனுஸ்டித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் பல காவல் நிலையங்கள் மூலம் தடையுத்தரவுகள் பெறப்பட்டிருந்தாலும் மாவீரர்களுக்கான அஞ்சலியை குறித்த நேரத்தில் ஈகைச்சுடர் மற்றும் தீபங்கள் ஏற்றி ஒரு நிமிட அகவணக்கத்துடன் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இன்றைய மாவீரர் தின அனுஸ்டிப்பு வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பல தடையுத்தரவுகள் மற்றும் கெடுபிடிகள் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவத்தினரும் காவல்துறையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.


மரண அறிவித்தல்