கோட்டாபயவுக்கு சவால் விடுத்த எதிரணி எம்.பி
இராணுவ அதிகாரியாக இருந்த தற்போதைய அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஒழுக்கமுள்ளவராக இருந்தால், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே (Hesha Withanage) சவால் விடுத்துள்ளார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் உரையாற்றிய அவர்,
விமல் வீரவன்ச தமது மனைவியின் கடவுச்சீட்டு குற்றச்சாட்டை விலக்கிக் கொள்வதற்காகவே நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் இரண்டு கடவுச்சீட்டுக்களை கொண்டிருந்த குற்றச்சாட்டுக்கு மாத்திரமல்ல, தனது தங்கையின் மகளது நிகழ்வு ஒன்றையும் அவர் தனது அமைச்சின் செலவிலேயே நடத்தியுள்ளார்.
இது குறித்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் கோரியுள்ளார்.

