இஸ்ரேல் -லெபனான் பேச்சு: ஹில்புல்லாவிடமிருந்து வந்த பிரதிபலிப்பு
இஸ்ரேலுக்கும் லெபனான் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை "பயனற்றவை" என்று வர்ணித்து, ஹிஸ்புல்லாவின் தலைவர் நயீம் காசிம் அவற்றை நிராகரித்துள்ளார்.
செவ்வாயன்று இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக லெபனான் அதிகாரிகள் வோஷிங்டனுக்குப் பயணம் செய்வதற்கு முன்னதாக இது நிகழ்ந்துள்ளது.
முழு லெபனானும்" இஸ்ரேலின் இலக்கு
இஸ்ரேலுடனான போர் தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, மார்ச் மாத தொடக்கத்தில், ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு லெபனான் அரசாங்கம் தடை விதித்தது.மேலும், பரந்த பிராந்தியப் போரில் நாட்டை இழுத்துச் செல்வதற்காக அந்த அமைப்பை லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன் விமர்சித்தார்.

IRGC-உடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட காசிமின் கருத்துக்களில், "முழு லெபனானும்" இஸ்ரேலின் இலக்கு என்றும், "இராணுவத்தைத் திரட்டுவது" லெபனான் அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அவர் கூறுகிறார்.
லெபனான் அரசாங்கத்திடம், "நீங்கள் போர் நிறுத்தம் வேண்டும் என்று சொல்கிறீர்கள், ஆனால் அவர்கள் என்ன சொல்கிறார்கள், உங்களிடம் என்ன செல்வாக்கு இருக்கிறது?" என்று அவர் கேட்கிறார்.
"எதிர்ப்பில் எங்கள் முடிவு, அமைதியடைவதும் இல்லை, சரணடைவதும் இல்லை," என்கிறார் அவர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |