தமிழ் இனப்படுகொலைக்கு மூடுவிழா! செம்மணியில் இருந்து திசை திருப்பப்படும் தமிழ் மக்கள்

Sonnalum Kuttram chemmani mass graves jaffna
By Dharu Jun 30, 2026 06:35 AM GMT
Report

தேசிய மக்கள் சக்தி (JVP/NPP) அரசாங்கத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷனா நனயக்கார தலைமையிலான குழு செம்மனி மனித புதைகுழியை பார்வையிட்ட விடயம் தொடர்பில் சர்வதேச அமைப்புக்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை பெற்றுள்ளது.

கடந்த ஜூன் 19 அன்று, இடம்பெற்ற இந்த விஜயத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி சித்துப்பாத்தி கூட்டு மனித புதைகுழியை குழு பார்வையிட்டது.

இந்தப் புதைகுழியில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான போரின்போது இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் பொதுமக்களின் எச்சங்கள் உள்ளன என சர்வதேச அமைப்பொன்று அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

சிங்கள பெண் சம்பாவின் செம்மணி திகில்!

சிங்கள பெண் சம்பாவின் செம்மணி திகில்!

நீதியமைச்சரின் கருத்து

இது குறித்து நீதியமைச்சரின் கருத்துக்களை மேற்கோள்காட்டியுள்ள அந்த அமைப்பு , அகழ்வாராய்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெறுவதாகக் கூறினாலும், “இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க” நீதி மற்றும் உண்மை விசாரணைகளை நடத்த விரும்புவதாகத் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளதாக அடிகோடிட்டுள்ளது.

தமிழ் இனப்படுகொலைக்கு மூடுவிழா! செம்மணியில் இருந்து திசை திருப்பப்படும் தமிழ் மக்கள் | Hiding Chemmani Tamil Mass Grave Truth

எனினும், இந்த வருகை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என அந்த அறிக்கை விளக்கியுள்ளது.

மேலும் அதில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

“பல பத்தாண்டுகளாக அரசு மூடிமறைத்து வந்த கொடூரங்களால் தமிழ் மக்களிடையே பெருகும் கோபத்தைத் தணிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏப்ரல் மாதம் தொடங்கிய அகழ்வாராய்ச்சியில், ஜூன் 17 வரை 412 எலும்புக்கூடு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதில் 409 எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. பல எச்சங்கள் ஒழுங்கற்ற முறையில் கூட்டமாகப் புதைக்கப்பட்டிருந்தன. இதுவரை 18 குழந்தைகளின் எச்சங்கள், அதில் ஆறு பச்சிளங்குழந்தைகளும் அடங்கும், கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

செம்மணி இப்போது இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பெருங்கொல்லப் புதைகுழியாக மாறியுள்ளது மன்னார் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட 380 எச்சங்களை விஞ்சியுள்ளது.

அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு :செம்மணியில் ஏற்றப்பட்ட தீபங்கள்

அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு :செம்மணியில் ஏற்றப்பட்ட தீபங்கள்

அடுத்தகட்ட நடவடிக்கை

அமைச்சர் நானயக்கார, அரசாங்கம் போதுமான நிதியை ஒதுக்கியுள்ளதாகவும், கூடுதல் நிதியை விடுவிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார். ஆனால் அரசாங்கத்தின் சொந்த பதிவுகள் இந்தக் கூற்றை பொய்யாக்குகின்றன. முதல் கட்டத்தில் 240 எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், நிதி விடுவிக்கப்படாததால் கடந்த ஆண்டு செப்டம்பர் 6 அன்று அகழ்வாராய்ச்சி இடைநிறுத்தப்பட்டது.

தமிழ் இனப்படுகொலைக்கு மூடுவிழா! செம்மணியில் இருந்து திசை திருப்பப்படும் தமிழ் மக்கள் | Hiding Chemmani Tamil Mass Grave Truth

சுமார் எட்டு மாதங்கள் கழித்து ஏப்ரலில் மீண்டும் தொடங்கப்பட்டது. DNA பரிசோதனை, தடயவியல் ஆய்வு, உறவினர்களின் DNA சேகரிப்பு உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு இன்னும் எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.

சர்வதேச தடயவியல் உதவியும் நாடப்படவில்லை. ஜூன் 25 அன்று நாடாளுமன்றத்தில், “தேவை ஏற்படும்போது சர்வதேச உதவி கோரப்படும்” என்று நானயக்கார கூறியிருந்தாலும், இது உண்மையான விசாரணையைத் தடுப்பதற்கான வெற்றுச் சொற்றொடராகவே கருதப்படுகிறது.

அரசாங்கம் இராணுவத்தின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் எந்த சுதந்திர விசாரணைக்கும் அஞ்சுகிறது.

செம்மணி மனிதப் புதைகுழி நீதிக்காக அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணி மனிதப் புதைகுழி நீதிக்காக அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

1998-ல் இருந்து தொடரும் மூடிமறைப்பு 

செம்மணி புதைகுழி பற்றிய முதல் தகவல் 1998-ல் வெளியானது. இராணுவ லான்ஸ் கொர்பொரல் சோமரத்ன ராஜபக்ச, பாடசாலை மாணவி கிரிஷாந்தி குமாரசுவாமி மற்றும் அவரது குடும்பத்தினர் கொலை வழக்கில் வாக்குமூலம் அளித்தபோது, செம்மணியில் 300 முதல் 400 தமிழ் பொதுமக்கள் புதைக்கப்பட்டிருப்பதாகவும், மூத்த இராணுவ அதிகாரிகள் கொலைகளுடன் தொடர்புடையதாகவும் தெரிவித்தார்.

தமிழ் இனப்படுகொலைக்கு மூடுவிழா! செம்மணியில் இருந்து திசை திருப்பப்படும் தமிழ் மக்கள் | Hiding Chemmani Tamil Mass Grave Truth

20 இராணுவ அதிகாரிகளை அவர் அடையாளம் காட்டினார்.அதன்பின் தொடங்கிய அகழ்வாராய்ச்சி சில இடங்களில் மட்டுமே நடைபெற்று நிறுத்தப்பட்டது.

2004-க்குள் வழக்கு முழுமையாக மூடப்பட்டது. அடுத்தடுத்த அரசாங்கங்கள் உண்மையை மறைத்தன. 2025 பிப்ரவரியில் தற்செயலாக மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே, நீதிமன்ற உத்தரவின் பேரில் மீண்டும் அகழ்வாராய்ச்சி தொடங்கியது.

ஆனால் JVP/NPP அரசாங்கமும் முந்தைய கொழும்பு அரசாங்கங்களைப் போலவே இராணுவப் பொறுப்பை மூடிமறைக்க உறுதியாக உள்ளது.

யாழ். நல்லூருக்கு செல்லும் வீதியிலும் புதிய மனிதப் புதைகுழிகள் - வெளியான அதிர வைக்கும் தகவல்

யாழ். நல்லூருக்கு செல்லும் வீதியிலும் புதிய மனிதப் புதைகுழிகள் - வெளியான அதிர வைக்கும் தகவல்

JVP/NPP-யின் போர்க்கால பின்னணி

JVP, போர் காலத்தில் முழுவதும் இராணுவ நடவடிக்கையை ஆதரித்தது. விடுதலைப் புலிகள் அமைப்புடனான சமாதான முயற்சிகளை எதிர்த்தது. 2009-ல் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பெரும் உயிரிழப்புகளுடன் போர் முடிவுக்கு வந்தபோது அதை கொண்டாடியது.

தமிழ் இனப்படுகொலைக்கு மூடுவிழா! செம்மணியில் இருந்து திசை திருப்பப்படும் தமிழ் மக்கள் | Hiding Chemmani Tamil Mass Grave Truth

போர்க்குற்ற விசாரணைகளை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. 2024 தேர்தலின்போது “நீதி” மற்றும் “நிலம் திருப்ப ஒப்படைப்பு” ஆகிய வாக்குறுதிகளை அளித்த அநுர குமார திசாநாயக்க தலைமையிலான JVP/NPP, ஆட்சிக்கு வந்த பின்னர் அனைத்தையும் கைவிட்டது.

இராணுவத்துடன் நெருக்கமான உறவைத் தொடர்கிறது. கிட்டத்தட்ட 40,000 ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களைக் கொண்ட தனி காப்புப் படையை உருவாக்கியுள்ளது.

செம்மணி புதைகுழி, 1983 முதல் 2009 வரையிலான போரின் கொடூரத்தை, சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை, சுட்டிக்காட்டுகிறது.

செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்…

செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்…

மக்களை திசைதிருப்பும் கட்சிகள்

போர் முடிந்த 17 ஆண்டுகளுக்குப் பின்னும் வடக்கு-கிழக்கில் பெரும் இராணுவ நிலைப்படுத்தல் தொடர்கிறது. தமிழ் தேசியக் கட்சிகள் சர்வதேச சமூகத்தை நம்புமாறு மக்களைத் திசைதிருப்புகின்றன.

ஆனால் அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய வல்லரசுகள் உள்ளிட்ட “சர்வதேச சமூகம்” இலங்கை அரசுக்கு ஆதரவளித்து வந்துள்ளது.

காசா, ஈரான் போன்ற இடங்களில் இனப்படுகொலை மற்றும் போர்களுக்கு ஆதரவு அளிப்பதையும் பார்க்கும்போது, ஏகாதிபத்திய சக்திகளை நம்ப முடியாது.

தமிழ் மக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறை, தொழிலாள வர்க்கத்தை இன அடிப்படையில் பிளவுபடுத்தி முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாக்கும் ஆளும் வர்க்கத்தின் உத்தி.

இன ஒடுக்குமுறை, போர்க்குற்றங்கள் மற்றும் அரசியல் அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவருவது, முதலாளித்துவத்தைத் தூக்கி எறிந்து, சர்வதேச சோசலிசக் கண்ணோட்டத்தில் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவும் ஒன்றுபட்ட தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் மூலமே சாத்தியம்” என இந்த அறிக்கை விளக்கப்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019