அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு :செம்மணியில் ஏற்றப்பட்ட தீபங்கள்
chemmani mass graves jaffna
By Theepan
மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செம்மணி பகுதியில் உள்ள அணையா விளக்கு திடல் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது
அதன் போது, அணையாவிளக்கு தூபிக்கு மலர் மாலை அணிவித்து, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
427 தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டன
அதனை தொடர்ந்து, செம்மணி மனித புதைகுழியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வு பணிகளில் இதுவரையில் 412 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , 1999ஆம் ஆண்டு கால பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, மீட்கப்பட்ட 15 என்பு கூடுகளுமாக 427 என்பு கூடுகளை நினைவுறுத்தி , 427 தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டன

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
1 வாரம் முன்
மரண அறிவித்தல்