சுவிசில் ஈழத்தமிழர் சமைக்கும் யூத உணவு
சுவிற்சர்லார்ந்தின் பேர்ன் நகரில் ஈழத்தமிழர் ஒருவரது உணவகத்தில் கிடைக்கும் உணவு புலால் அற்றது மட்டுமல்ல, யூத சமயத்தவர்களும் உண்ணக்கூடியது என்று பேர்ன் நகர யூதர்கள் பேராயத்தால் சான்று வழங்கப்பட்டுள்ளது.
“வணக்கம்” உணவகம் எனும் பெயரில் விளங்கிவரும் இந்த உணவகத்தை ஈழத்தமிழரான தர்மலிங்கம் சசிக்குமார் நடத்தி வருகிறார்.
இங்கு கிடைக்கும் உணவுகள் பற்றியும், அதன் முகாமையாளரும் சமையல் திறவோனாகவும் இருக்கின்ற சசிக்குமாரின் முயற்சி பற்றியும் அந்நாட்டு பத்திரிகைகளும் கவனம் ஈர்த்துள்ளன.
புலால் அற்ற ஆயுர்வே சமையல்
ஐரோப்பாவில் தமிழ் வழிபாட்டினை முதன்மைப்படுத்தி சைவத் தமிழை பரப்பி ஒழுகும் சைவநெறிக்கூடத்தின் பணியினை தொண்டாக ஆற்றிவரும் இவர், தனது வாழ்க்கைத் தொழிலாக புலால் அற்ற ஆயுர்வே சமையலைத் தெரிவுசெய்துகொண்டு பன்னாட்டவர்களும் தமிழ் உணவை விரும்பி உண்ண பேர்ன் தலை நகரில் வழிசெய்துள்ளார்.
கொஷ்சர் (திருவிளங்கும் உணவு) என யூதர்களால் அழைக்கப்படும் உணவு தயாரிப்பதற்கு என்று பல நெறிகள் உண்டு.
ஒரு ஈழத்தமிழர், சைவசமயக்குரு, புலால் அற்ற ஆயுள்வேதமாக தயாரிக்கும் உணவு எப்படி திருவுணவானது என்பதற்கு முன்னோட்டக்கதை ஒன்றும் உண்டு.