ஹரீனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட மனு.. ஏற்க மறுத்த இந்திய உயர்ஸ்தானிகராலயம்
Sri Lanka
High Commission of India Colombo
India
Harin Fernando
By Kathirpriya
அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவிற்கு எதிராக இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை, இந்தியாவின் ஒர் மாநிலம் என ஹரீன் வெளியிட்ட கருத்து அரசியல் அமைப்பிற்கு முரணானது எனவும் அது நாட்டு மக்களின் நிலைப்பாடு அல்ல எனவும் கூறி இந்த மனு தயாரிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு கையூட்டல், ஊழல் மற்றும் விரயங்களுக்கு எதிரான பிரஜைகள் அமைப்பினால் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விரிவான செய்திகளுக்கு இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பை காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி