வன ஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
குருநாகல் - எஹடுவெவ பகுதியில் இடம்பெறும் வன அழிப்பை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வன ஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட மூன்று தரப்பினரால் மனு தாக்கல் செய்யப்பட்டதால் அதனைப் பரிசீலனைக்கு உட்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வன அழிப்பை தடுத்து நிறுத்த
எஹடுவெவ – நாகொலகனே பகுதியில், உள்ள ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலத்வெவ ராஹுல தேரர் 4 ஆயிரம் ஏக்கர் அளவிலான காணியை கையகப்படுத்தி, வன அழிப்பை மேற்கொண்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வன அழிப்பினால் யானைகளின் வழித்தடங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மனுதாரர்கள் அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனை ஆராய்ந்த உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழு, வன அழிப்பை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்