தென்னிலங்கையில் அதியுயர் பாதுகாப்பு வலயம் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய தகவல்!
கொழும்பில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் புலனாய்வுப் பிரிவுகளின் உதவியுடன் புதிய மாற்றுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி வெளியான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யவது தொடர்பில் ஆராயுமாறு ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொழும்பின் சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வது தொடர்பில் ஆராயுமாறு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
வர்த்தகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உயர்பாதுகாப்பு வலயங்கள்
இவ்வாறான உயர்பாதுகாப்பு வலயங்கள், வர்த்தகங்களுக்கு பாதகமான நிலையை ஏற்படுத்துவதாக சில பொருளாதார நிபுணர்கள் தெரிவித்ததையடுத்து ரணில் இந்த முடிவை எடுத்துள்ளதாக ரணிலுக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான தனது விஜயங்களை முடித்துக் கொண்டு ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பிய பின்னர் வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு நிபுணர்கள் சிலரின் ஆலோசனைக்கு அமைய சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் சில பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அதிபர் அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.