அதிவேக வீதிகளில் நடத்துனர் இன்றி இயங்கவுள்ள அரச பேருந்துகள்
Sri Lanka
Transport Fares In Sri Lanka
By Sumithiran
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை அதிவேக வீதிகளில் நடத்துனர்கள் இன்றி ஜூலை முதலாம் திகதி முதல் இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்தந்த பேருந்துகள் இயக்கப்படுவதற்கு முன் அனுமதி சீட்டுக்கள் வழங்கப்படும் என்றும், அந்த அனுமதி சீட்டுக்களை பேருந்து ஓட்டுநர் வழங்குவார் என்றும் அதிகாரி கூறினார்.
வளர்ந்த நாடுகளில்
இங்கிலாந்து, துபாய் போன்ற வளர்ந்த நாடுகள் இந்த முறை பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி வருவதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
