வெளிநாடொன்றில் அதிவேக தொடருந்துகள் மோதி கோர விபத்து - பலர் பலி
தெற்கு ஸ்பெயினில் இடம்பெற்ற இரண்டு அதிவேக தொடருந்துகள் (High-speed trains) மோதி விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் சம்பவம் கோர்டோபா (Cordoba) நகருக்கு அருகிலுள்ள அடமுஸ் என்ற இடத்திற்கு அருகே நிகழ்ந்துள்ளது.
குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்பு எண்ணிக்கை
இதேவேளை படுகாயமடைந்தவர்கள் அவசர நோய் காவு வண்டிகள் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் 300 க்கும் அதிகமான பயணிகள் அந்த தொடருந்துகளில் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர், சிதைந்த பெட்டிகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |