கலைப்பிரிவில் இணைக்கப்படவுள்ள புதிய பாடங்கள்: உயர்கல்வி அமைச்சினால் எடுக்கப்பட்ட தீர்மானம்
இந்நாட்டின் தொழில் சந்தைக்கு ஏற்றவாறு பல்கலைக்கழகங்களில் கலைப் பட்டப்படிப்புகளில் உள்ள பல பாடங்களை உயர்கல்வி அமைச்சின் கூற்றுப்படி மேம்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கலைப் பிரிவுகளில் தற்போது 314 பட்டப் படிப்புகள் இயங்கி வருவதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
நோக்கம்
அதன்படி, வேலை வாய்ப்பு சந்தைக்கு ஏற்றவாறு படிப்புகள் புதுப்பிக்கப்பட்டு அடுத்த ஆண்டு இறுதிக்குள் செய்யப்படும் என்றும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தற்போதுள்ள தொழில் சந்தையில் தொழில்சார் மற்றும் நடைமுறை திறன்களைக் கொண்ட தலைமுறையை உருவாக்குவதே இதன் நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்கலைக்கழகம்
அதேவேளை, கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு மேல் 600 ஏக்கர் காணி சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை அமைப்பதற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று (02) நடைபெற்ற முதலாவது சர்வதேச காலநிலை மாநாட்டில் அதிபர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.