மில்லியன் கணக்கில் வருமானத்தை ஈட்டிய இலங்கை! வெளியான தகவல்
நாட்டிலுள்ள நெடுஞ்சாலைகள் மூலம் கடந்த மூன்று தினங்களில் அதிக வருமானம் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இத்தகவலை நெடுஞ்சாலை செயல்பாடுகள் பராமரிப்பு மற்றும் முகாமைப் பிரிவின் பணிப்பாளர் ஆர். ஏ. டி. கஹடபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
மில்லியன் ரூபாய் வருமானம்
இதன்படி, மொத்தம் 126 மில்லியன் ரூபாய் வருமானம் நெடுஞ்சாலைகளின் மூலம் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் குறித்த காலப்பகுதியில், 366,000 வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளதாக ஆர். ஏ. டி. கஹடபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புத்தாண்டு விடுமுறையின் போது அதிவேக நெடுஞ்சாலை ஊடாக ஒன்றரை முதல் இரண்டு இலட்சம் வரையிலான வாகனங்கள் பயணிக்கும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.பி. சூரியபண்டார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |