பொருளாதாரத்தை பாதிக்குமா தேர்தல்...! ஆசிய அபிவிருத்தி வங்கியின் எச்சரிக்கை
இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்கள் மூலம் ஏற்படும் ஆட்சி மாற்றம் மற்றும் கொள்கை மாற்றங்கள், நாட்டின் பொருளாதார மீட்சிப் பாதையில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துமென ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் மெதுவாக நிலைத்தன்மையை அடைந்து வரும் நிலையில், அதனை பாதிக்காத வகையில் தேர்தல் நடத்தப்படுவது சிறந்தது என அந்த வங்கி கூறியுள்ளது.
இலங்கையின் பொருளாதாரம்
இலங்கையின் பொருளாதாரம் கடந்த 2022 ஆம் ஆண்டில் எதிர்பாராத வகையில் வீழ்ச்சியடைந்தது. இதனால் இலங்கை பல பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்கப்பெற்றது.
இதையடுத்து, தற்போது இலங்கையின் பொருளாதாரம் மேம்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டில் 1.9 வீதத்தாலும் அடுத்த ஆண்டு 2.5 வீதத்தாலும் வளர்ச்சியடையுமென ஆசிய அபிவிருத்தி வங்கி அண்மையில் தெரிவித்தது.
தேர்தல்களின் பாதிப்பு
எனினும், இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறும் தேர்தல்களினால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படக்கூடாதென அந்த வங்கி வலிறுத்தியுள்ளது.
அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலின் பின்னர், நாட்டின் பொருளாதாரதத்தில் நிலையற்ற தன்மை ஏற்படலாமெனவும் ஆசிய அபிவிருத்தி வங்கி எச்சரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |