யாழ் போதனாவில் அத்துமீறி தொலைபேசி களவாடிய இளைஞர்: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
யாழ் போதனா வைத்தியசாலையில் கையடக்க தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் கைதான இளைஞருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
யாழ் . போதனா வைத்தியசாலை வளாகத்தினுள் நேற்று முன்தினம் (25-01-2026) நள்ளிரவு வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் கண்காணிப்பையும் மீறி அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர் , சுத்திகரிப்பு பணியாளர்களின் மேற்பார்வையாளரின் கையடக்க தொலைபேசியை களவாடியுள்ளார்.
இளைஞர் முன்னிலை
இதையடுத்து, பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் விரைந்து செயற்பட்டு, கையடக்க தொலைபேசியை திருடிய இளைஞனை மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் நேற்றைய தினம் (26-01-2026) யாழ். நீதவான் நீதிமன்றில், குறித்த இளைஞர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது, இளைஞரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |