வவுனியாவில் விபத்தில் சிக்கி நால்வர் படுகாயம்...!
வவுனியாவில் விபத்தில் சிக்கி நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இன்று (27-01-2026) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னாரில் இருந்து மாதவாச்சி நோக்கி பயணித்த கூலர் ரக வாகனமும் மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி பயணித்து ஜீப் ரக வாகனமும் செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
பொது வைத்தியசாலை
விபத்தில் சிக்கியவர்கள், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செட்டிக்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது வீதியில் நின்ற கட்டாக்காலி மாடுகளினால் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


