முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு - வெளியான மகிழ்ச்சித் தகவல்
முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பள அதிகரிப்பானது பிப்ரவரி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கொழும்பு மாநகர ஆணையர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு
கொழும்பு மாநகர எல்லைக்குள் சபை அதிகாரத்தின் கீழ் இயங்கும் அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கே சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டும், முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னர் ரூ.20,000 ஆக இருந்த மாத சம்பளம் ரூ.30,000 ஆக உயரும் என்றும் பிப்ரவரி முதல் ஆசிரியர்கள் திருத்தப்பட்ட சம்பளத்தைப் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொழும்பிற்குள் உள்ள அனைத்து மதங்களின் பதிவுசெய்யப்பட்ட அறநெறிப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கான காலை உணவு கொடுப்பனவு ரூ. 60 லிருந்து ரூ. 100 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |