கடத்தப்பட்ட இலங்கைக் கப்பல் : சோமாலிய கடற்படையுடன் பேச்சுவார்த்தை
சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்த ‘லொரென்சோ சன் 4’ கப்பலின் கடற்றொழிலாளர்களை பாதுகாப்பாக விடுவிப்பதற்காக சோமாலிய கடற்படையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கென்யாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
கென்யாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வி.கனநாதன், எதியோப்பியாவிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளுடன் இணைந்து, சோமாலியாவின் கடற்படைத் தலைவர் அட்மிரல் அப்திவர்சாமி ஒஸ்மானுடன் நெருக்கமாகச் செயற்படுவதாகத் தெரிவித்தார்.
இதனிடையே, சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட பல நாள் கடற்றொழில் கப்பல் குறித்து விசாரணை நடத்துமாறு பஹ்ரைனில் உள்ள கூட்டு கடற்படைக்கு இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
சோமாலிய கடற்கொள்ளையர்கள்
பஹ்ரைனின் கூட்டு கடல் சார் படை 39 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட , கடற்படைக் கப்பல்களின் பாதுகாப்பைக் கையாளும் ஒரு அமைப்பாகும்.
கடந்த 12ஆம் திகதி திக்ஓவிட்ட துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ‘லொரென்சோ சன் 4’ என்ற கப்பலை, ஷேல்ஸ் மாகாணத்திற்கு அருகில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த கடற்றொழில் கப்பலில் இருந்த 06 இலங்கை இலங்கை கடற்றொழிலாளர்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |