ஹிலாரி கிளின்டனுக்கு கொரோனா
corona
us
hillary clinton
By Sumithiran
அமெரிக்க முன்னாள் வெளியுறவு செயலர் ஹிலாரி கிளிண்டனுக்கு (74)கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு இலேசான அறிகுறிகள் உள்ளன. ஆனால் நலமாக உள்ளார். இதை அவரே தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் அவரது கணவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பில் கிளிண்டனுக்கு தொற்று பாதிப்பு இல்லை.
இதையொட்டி ஹிலாரி கிளிண்டன் கூறும்போது, “கடுமையான நோய்க்கு எதிராக தடுப்பூசிகள் வழங்கும் பாதுகாப்புக்கு முன் எப்போதையும் விட நன்றியுள்ளவளாக இருக்கிறேன்” என குறிப்பிட்டார்.
இந்த மாத தொடக்கத்தில் முன்னாள் அரச தலைவர் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி