பணி பிரிவிற்கு மாற்றப்பட்ட ஹிருணிகா!
Sri Lanka Politician
Hirunika Premachandra
Court of Appeal of Sri Lanka
By Aadhithya
தற்போது சிறையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) சிறைச்சாலையின் பணி பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
2015இல் தமது டிபெண்டர் வாகனத்தின் மூலம் இளைஞரை கடத்தி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த நிலையில், தொடர்ந்து நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகளில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கடூழிய சிறைத்தண்டனை
இதனையடுத்து, மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனையில் தற்போது சிறையில் உள்ள ஹிருணிகா, மகளிர் சிறைச்சாலையின் பணிப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இருப்பினும், பணித் துறையில் அவரது பணிகள் என்ன என்பது வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |

மரண அறிவித்தல்