காவல்துறையினருக்கும் ஹிருணிகாவுக்கும் இடையில் முரண்பாடு: ஏற்பட்டுள்ள பதற்ற நிலை
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
Hirunika Premachandra
By Kiruththikan
காவல்துறையினர் இடையூறு
ஐக்கியபெண்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமசந்திரவிற்கு ஸ்ரீலங்கா காவல்துறையினர் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த நிலையில் அவரின் போக்குவரத்தினை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தடைகளை ஏற்படுத்தி செல்ல விடாது தடுத்துள்ளனர்.
வீதித் தடையினை ஏற்படுத்திய காவல்துறையினர்
அரச தலைவர் மாளிகை அமைந்துள்ள பகுதியினால் பயணித்துள்ள போது அவரை கண்ட காவல்துறையினர் வீதித் தடையினை ஏற்படுத்தியுள்ளனர்.
ஏன் செல்ல விடாது தடுக்கின்றீர்கள் என வினவி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் குறித்த பிரதேசத்தில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் சம்பவத்தினை அறிந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தில் பொதுசெயலாளர் குறித்த இடத்திற்கு விரைந்துள்ளார்..




