84 ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட ஹிட்லரின் முக்கிய ஆவணங்கள்
இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஜெர்மன்(germany) தூதரகம் அனுப்பிய அடோல்ஃப் ஹிட்லரின் (adolf hitler)தேசிய சோசலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சிக்குச் சொந்தமான ஆவணங்கள் அடங்கிய 83 பெட்டிகள் ஆர்ஜன்ரீனாவின்(Argentina) உச்ச நீதிமன்றக் கட்டிடத்தின் அடித்தள சேமிப்பு அறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக CNN தெரிவித்துள்ளது.
அப்போது நாஜிக்களுக்குச் சொந்தமான ஆவணங்களை ஆர்ஜன்ரீனா அதிகாரிகள் திறந்து ஆய்வு செய்ததாகவும், பின்னர் அவற்றை பறிமுதல் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதி ஆய்வு
ஆர்ஜன்ரீனா உச்ச நீதிமன்றத்தின் ஆவணக் காப்பகங்களிலிருந்து மீண்டும் வெளிவந்த அஞ்சல் அட்டைகள், புகைப்படங்கள் மற்றும் நாஜி பிரசார துண்டுப்பிரசுரங்கள் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்களை உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் ஆய்வு செய்துள்ளார்.
84 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட நாஜி ஆவணங்களின் தொகுப்பு, ஆர்ஜன்ரீனாவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
