கடந்த கால ஒப்பீடுகளுடன் வெளியாகிய எச்.ஐ.வி அறிக்கை - அதிகரித்து வரும் எச்.ஐ.வி - சுகாதார அதிகாரிகள் கவலை!
நாட்டில் எச்.ஐ.வி தொற்று வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் குறித்த எச்.ஐ.வி தொற்று விகிதம் குறித்து சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த கால ஒப்பீடுகளுடன் டாக்டர் திருமதி விஜேவிக்ரம இதனைத் தெரிவித்துள்ளார்.
எச்.ஐ.வி நோயாளிகள்
2021 ஆம் ஆண்டில் 25 எச்.ஐ.வி நோயாளிகளும் அதற்கு முந்தைய ஆண்டில் 36 பேரும் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலோர் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் என்றும் காலி மஹமோதர வைத்தியசாலையின் பால்வினை நோய் தடுப்புப் பிரிவின் வைத்திய அதிகாரி டாக்டர் தர்ஷனி விஜேவிக்கிரம கூறியுள்ளார்.
இன்னும் கண்டறியப்படாத நிலையில் மேலும் நோயாளிகள் இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், கடந்த 2022 ம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை நாட்டிலிருந்து 427 நபர்கள் பதிவாகியுள்ளதாகவும் டாக்டர் தர்ஷனி விஜேவிக்கிரம மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 1986 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எச்.ஐ.வி தொற்று கண்டறியப்பட்டதில் இருந்து 4831 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
