இந்தியாவில் முதல் தடவையாக HMPV தொற்று உறுதி! அச்சத்தில் உலக நாடுகள்
சீனாவில் (China) பரவி வரும் ஹுயூமன் மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) தொற்று தற்போது முதன் முறையாக இந்தியாவில் இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் உருவான கோவிட் வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.
ஹுயூமன் மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எச்.எம்.பி.வி தொற்று
இதன்போது, பெங்களூருவை சேர்ந்த 3 மாத பெண் குழந்தை மற்றும் 8 மாத ஆண் குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தைகள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் அவரகளது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல உயிர்களை காவு கொண்ட கோவிட் தொற்றை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மேலும், சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதோடு, இதில் சிறுவர்கள் பலர் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக உலக நாடுகள் பலவும் அச்சத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |