பாடசாலைகளுக்கு விடுமுறை - வெளியான அறிவிப்பு
கதிர்காமத்தில் மூன்று பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் வீதி விழா உற்சவத்தை முன்னிட்டு ஜூன் 19ஆம் திகதி முதல் ஜூலை 04ஆம் திகதி வரை இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது.
கதிர்காம ஆலயத்தின் வீதி விழா
இதனை தனமல்வில வலயக் கல்விப் பணிப்பாளர் புத்திக கருணாதாச உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜூலை 03 ஆம் திகதி மாபெரும் ஊர்வலத்தின் மறுநாள் மாணிக்க கங்கையில் நீர் வெட்டு விழாவின் பின்னர் ஊர்வலம் நிறைவடையும். ஊர்வல விழா விசேட கடமைகளுக்காக வரும் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக மூன்று பாடசாலைகளின் கட்டடங்களை காவல்துறை திணைக்களம் கோரியுள்ளது.
காவல்துறைக்கு பாடசாலைகள்
அதன் பிரகாரம் கதிர்காமம் தேசிய பாடசாலை, செல்ல கதிர்காமம் மஹா வித்தியாலயம் மற்றும் தெட்டகமுவ வித்தியாலயம் என்பன காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தனமல்வில பிராந்திய கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
