வடக்கு மாகாணத்திலும் தமிழ்பாடசாலைகளுக்கு விடுமுறை
northern-province
tamil school
holidays
By Jaso
வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநரால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளை மறுதினம் விடுமுறை வழங்கப்படுகின்ற நிலையில், அதற்கு பதிலாக எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வித் திணைக்களங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் உள்ள சகல தமிழ் பாடசாலைகளும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (05) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
you may like this