பரிசுத்த பாப்பரசருக்கு வவுனியாவில் அஞ்சலி!
பாப்பரசர் போப்பிரான்சிஸ் அவர்களிற்கு வவுனியா (Vavuniya) தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்றைய தினம் (22.04.2025) வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் போப்பிரான்ஸ்சிஸ் வத்திகானில் நேற்று (21.04.2025) உயிரிழந்தார்.
காணாமல் ஆக்கப்பட்டோர்
அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலிநிகழ்கள் இடம்பெற்றுவருகிறது.அந்தவகையில் வவுனியா தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் தொடர்போராட்டம் மேற்கொண்டுவரும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக உள்ள கொட்டகையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது அன்னாரது திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
பாப்பரசரின் மறைவையொட்டி துயரடைந்திருக்கும் உலக கிறிஸ்தவ மகளின் துயரத்தில் நாங்களும் கலந்துகொள்கின்றோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
