சிறிலங்கா காவல்துறை அதிகாரியின் நேர்மை - பலரும் பாராட்டு
Sri Lanka Police
Sri Lankan Peoples
Money
By Sumithiran
வீதியில் தவறவிடப்பட்ட பணப்பை கண்டெடு்ப்பு
வெல்லம்பிட்டி காவல் நிலைய போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் இஷார மதுசங்க என்ற காவல்துறை உத்தியோகத்தரே வீதியில் விழுந்திருந்த பணப்பையை கண்டெடுத்துள்ளார்.
வெல்லம்பிட்டிய பாண்டியாவத்தை பகுதியில் உள்ள வீதியொன்றில் இந்தப் பணப்பை கிடந்துள்ளது. பணப்பையை பரிசோதித்த போது, அதில் ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 960 ரூபாய் பணமும், 3 இலட்சம் ரூபாய் காசோலையும் இருந்துள்ளது.
உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை
பின்னர், இது தொடர்பில் வெல்லம்பிட்டிய காவல் நிலைய அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பணப்பையின் உரிமையாளர் தொடர்பில் தகவல் தெரியவர, அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து பணப்பை ஒப்படைக்கப்பட்டது.
தவற விடப்பட்ட பணப்பையை கண்டெடுத்து உரியவரிடம் சமர்ப்பித்த காவல்துறை அதிகாரிக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி