ஹொரண வங்கிக் கொள்ளை: உதவி மேலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு
ஹொரண பகுதியில் வங்கியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வங்கியின் உதவி மேலாளருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
ஹொரண தலைமை நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதனடிப்படையில் ஜூன் 23 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நந்தன சரத் குமார (54 வயது) என்ற குறித்த உதவி மேலாளரே இன்று (09-06-2026) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொதுச்சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள் சட்டத்தின் (Offences Against Public Property Act) கீழ் சந்தேகநபருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளதாகவும் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட வங்கியின் செயல்பாட்டு நடைமுறைகள் குறித்த அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் கோரியுள்ளது.
இயந்திரங்களில் வைப்பு
ஏடிஎம் (ATM) இயந்திரங்களில் வைப்பு செய்வதற்காக வெளியில் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படும் பணத்திற்கும் வங்கியின் பாதுகாப்பறைக்குள் (Vault room) கண்டெடுக்கப்பட்ட ரொக்கப் பணத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், பிரிவு 54(1) இன் கீழ் சந்தேகநபருக்கு எதிராகப் போடப்பட்டிருந்த முந்தைய வழக்கொன்றைக் காவல்துறை மீளப் பெற்றுக்கொண்டது.

இந்த நிலையில், இவ்வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான வங்கியின் பாதுகாப்பு அதிகாரி (Security officer), வரும் ஜூன் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 1 நாள் முன்