நாடாளுமன்றில் பேசுபொருளாகிய கிளிநொச்சி சொல்லிசைப் பாடகரின் கைது விவகாரம்
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை சுட்டிக்காட்டிய பாடல்களை பாடியதாக கூறி கைதுசெய்யப்பட்ட கிளிநொச்சி இளைஞன் மீது முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(09.06.2026) உரையாற்றிய அவர் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
[JVOLON0 ]
மீள் கட்டமைக்கும் முயற்சியா
“தற்போதைய அரசாங்கத்தின் தேர்தல் மேடைகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை சுட்டிக்காட்டிய பாடல்கள் ஒலிக்கப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த பாடல்களை இந்த அரசாங்கம் ஜனாதிபதியை மேடைகளில் வைத்துக்கொண்டே வெளிப்படுத்தின. இதன்போது பயங்கரவாத தடை சட்டம் எங்கு சென்றது?
கிளிநொச்சியில் இளைஞன் ஒருவர் மேடையில் பாடல் பாடியதற்காக, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் கட்டமைக்கும் முயற்சி என குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு அரசியல் சதி என்பது தெளிவாகியது.
இவை பொதுமக்களை ஏமாற்றும் செயற்பாடு. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் இவ்வாறு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 1 நாள் முன்