தென்னாபிரிக்காவில் கோரவிபத்து -19 மாணவர்கள் துடிதுடித்து பலியான துயரம்
மாணவர்களை ஏற்றிச் சென்ற மினிவான் மீது பாரவூர்தி மோதல்
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற மினிவான் மீது பாரவூர்தி மோதியதில் 19 மாணவர்கள் உட்பட 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயர சம்பவம் தென்னாபிரிக்காவில் நடந்துள்ளது.
தென்னாபிரிக்கா நாட்டின் குவாஸ்லு - நடால் மாகாணத்தில் ஆரம்ப பாடசாலை உள்ளது. இந்த பாடசாலையில் வகுப்பை நிறைவு செய்துவிட்டு நேற்று மாலை குழந்தைகள் பாடசாலை மின் வானில் வீட்டிற்கு புறப்பட்டனர்.
மினிவானில் 19 குழந்தைகள், வான் சாரதி, உதவியாளர் என 21 பேர் பயணித்தனர். நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பாடசாலை வாகனம் மீது சாலையின் எதிரே வந்த சரக்கு லொறி வேகமாக மோதியது.
காவல்துறையினர் விசாரணை
இந்த கோர விபத்தில் மினிவானில் பயணம் செய்த 19 குழந்தைகள் உள்பட 21 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
