மற்றுமொரு விபத்து: வெளிநாட்டு தம்பதியர் உட்பட பலர் படுகாயம்
Anuradhapura
Kandy
Accident
By Sumithiran
அனுராதபுரம் - கண்டி பிரதான சாலையில் உள்ள மரதன்கடவல பகுதியில் ஜீப்பும் வானும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், வெளிநாட்டு தம்பதியர் உட்பட ஒன்பது பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அனுராதபுரத்திலிருந்து கொழும்புக்கு வெளிநாட்டு தம்பதியினரை ஏற்றிச் சென்ற ஜீப், எதிர் திசையில் இருந்து வந்த வான் மீது மோதியது.
வெளிநாட்டு தம்பதியர் மற்றும் ஜீப்பின் ஓட்டுநர் படுகாயம்
வெளிநாட்டு தம்பதியர் மற்றும் ஜீப்பின் ஓட்டுநர் படுகாயமடைந்தனர், மேலும் வானில் இருந்த மற்ற குழுவினரும் சிகிச்சைக்காக மரதன்கடவல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

விபத்து குறித்து மரதன்கடவல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
9ம் ஆண்டு நினைவஞ்சலி