மத்திய முகாம் ஆதார வைத்தியசாலையில் சிரமதான நிகழ்வு!
மத்திய முகாம் ஆதார வைத்தியசாலையில் இன்று (14) சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கை அடிப்படை உரிமைகள் அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளரும், நளிர் அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவருமான எம்.ஏ. நளிர் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
அது மாத்திரமல்லாமல், குறித்த சிரமதான நிகழ்வில் மத்திய முகாம் காவல் நிலைய பொறுப்பதிகாரி பி.பி.கே. பத்திரன, மத்திய முகாம் ஆதார வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி கே. ஐ.இசுறு பொடிக்காற உள்ளிட்ட அதிகாரிகள் வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஊழியர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச வாசிகளும் இப்பணியில் கலந்து கொண்டனர்.
சிரமதான நிகழ்வு
இனங்களுக்கிடையே நல்லுறவைப் பேணும் வகையில் எம்.ஏ. நளிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லிம்கள் என்ற வேறுபாடுகள் அற்ற முறையில் அனைவரது பங்களிப்புடனும் இந்தச் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.
பெருகிவரும் டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் வைத்தியசாலை வளாகத்தை சுத்தப்படுத்தும் நோக்கிலும் குறித்த சிரமதான நிகழ்வு இடம்பெற்றது குறிப்பிடத்தக்ககது.