ஒக்சிஜன் விற்று சூதாடிய மருத்துவமனை ஊழியர் சிக்கினார்
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஆபத்தான நோயாளர்களுக்கு வழங்கப்படும் ஒக்சிஜன் சிலிண்டர்களை திருடி குறைந்த விலைக்கு விற்று சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் ஒக்சிஜன் சிலிண்டர் பொறுப்பாளராக இருந்த ஒருவர் நேற்று முன்தினம் (25) கைது செய்யப்பட்டதாக அநுராதபுரம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் ஒக்சிஜன் சிலிண்டர் அறைக்கு பொறுப்பாக இருந்த 47 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மூன்று ஒட்சிசன் சிலிண்டர்களுடன்

சந்தேகநபர் இந்த கடத்தலை சில காலமாக மேற்கொண்டு வருவதாகவும், தலாவ பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு 4 அடி உயர ஒக்சிஜன் சிலிண்டர்களை 60,000 ரூபாவிற்கு விற்பனை செய்யச் சென்ற போது, மூன்று ஒட்சிசன் சிலிண்டர்களுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இதற்கு முன்னர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு பணி இடைநிறுத்தப்பட்டு பின்னர் பணிக்கு திரும்பியவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.